Saturday, September 15, 2012

Ammaa

Amma Amma Amma
I wants you always amma

First I saw you Amma
First I felt you Amma

The word I told first Amma
The word I wrote first Amma

You are so kind Amma
Your love is perfect Amma

I like to be with you Amma
I like to respect Amma

You kiss me always Amma
I pray you always Amma

How many people I saw
Nobody is like Amma

You are my soul Amma
I need you for ever Amma



Friday, September 14, 2012

அன்னை

அன்னை மடி சொர்க்கமடி
வஞ்சம் அங்கு இல்லையடி

அன்பு மட்டும் வாழுமிடம்
அன்னை நெஞ்சம் பாருங்கடி

நூறு சொந்தம் சுற்றியிருந்தும்
சொத்து சுகம் கொட்டியிருந்தும்

அன்னை அன்பு இல்லையென்றால்
இன்பம் அங்கு இல்லையடி

அன்னை எந்தன் தெய்வமடி
அன்னை அன்பு சுத்தமடி

அன்னை எந்தன் பக்கமிருந்தால்
வேறு தெய்வம் ஏதுக்கடி


Wednesday, August 11, 2010


அம்மா
பக்கத்தில்  உனையிருத்தி
பக்குவமாய்   சோறூட்டி
பைந்தமிழ் பல பயின்று
பள்ளிக்கு அனுப்பி வைத்தாள் !!

உனை வளர்த்து  ஆளாக்க
அவள் பட்ட துன்பங்கள்???
நீ உலகில்  வளம் பெறவே 
அவள் போட்ட வேண்டுதல்கள்????

நீயின்று வெளி நாட்டில்
உன் அன்னை தனி வீட்டில்.
பரிமழக்கா  பாத்திடுவா
பணமிங்கு நானனுப்ப.

பணத்திற்கு பாசத்தை
யார் தருவார் இவ்வுலகில்?
பட்டு மெத்தை நீ கொடுத்தால்
பாசமதை யார் தருவார்?

உன் அன்னை அன்றுன்னை
விடுதிக்கு அனுப்பி விட்டு
உலகெங்கும் தான் சுற்றி
ஊரில் உன்னை விட்டிருந்தால்???

அப்போது புரிந்திருப்பாய்
அன்னையவள் அருமைதனை!!
இப்போது உன் தேவை
பை நிறையப் பணம்  தானே??

வயோதிபர் விடுதிக்கு
உன் பிள்ளை  உனையனுப்பும்.
இல்லையேல் தனக்கொரு
தனி வீ டு  தேடிவிடும்.

அன்றுதான் நீ உணர்வாய்
அன்னையவள் வலியதனை.
அப்போதும் கூட ......
வானிலே உன் அன்னை
வணங்கிடுவாள் உனக்காக!!!!!!!!!!!



அருள்